சுனாமியின் கோரத் தாண்டவத்தால் மக்கள் வசிக்கத் தகுதியற்ற இடமாக மாறி முற்றிலும் அழிந்து விட்ட சென்டாய் நகரம்!
ஜப்பான் சுனாமிக்கு அங்குள்ள சென்டாய் நகரம் தான் மிகவும் பாதிக்கப் பட்டுள்ளது. ஜப்பானின் முக்கிய துறைமுக நகரான இங்கு 10 லட்சம் பேர் வசித்து வந்தனர்.அவர்களில் இப்போது எத்தனை பேர் உயிரோடு இருக்கிறார்கள் என சொல்ல முடியாத அளவுக்கு ஏராளமானோர் சுனாமிக்கு பலியாகி உள்ளனர்.
பூகம்பம் ஏற்பட்டு அடுத்த சில வினாடிகளிலே இங்கு சுனாமி தாக்கி விட்டது. இதனால் மக்களால் சுதாரித்து தப்பிக்க கூட முடியவில்லை.
இந்த நகரில் பெரும்பாலான வீடுகள் பூகம்பத்தை தாங்கும் திறன் கொண்டதாகவே கட்டி இருந்தனர். ஆனால் பெரும் சக்தியுடன் தாக்கிய சுனாமி அந்த வீடுகளை அப்படியே பெயர்த்து எடுத்து தரைமட்டமாகி விட்டது.
இங்குள்ள பெரும்பாலான வீடுகள் இடிந்து விட்டன. அல்லது வெடித்து நிற்கின்றன. எனவே அந்த வீடுகளில் மறுபடியும் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சென்டாய் நகரமே முற்றிலும் அழிந்து விட்டது போலவே காட்சி அளிக்கிறது.
தெருக்கள் முழுவதும் சுனாமியில் இழுத்து வரப்பட்ட பொருட்கள் சிதறி கிடக்கின்றன. சேறும், சகதியுமாக உள்ளது. எனவே தெருக்களில் நடந்து கூட செல்ல முடியவில்லை. சுனாமி அலை கடலில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ளே வந்துள்ளது.
துறைமுகத்தில் இழுத்து அடித்து வரப்பட்ட கண்டெய்னர்கள் கடலில் இருந்து 2 கிலோ மீட்டர் வரை உள் பகுதிக்குள் வந்து கிடக்கின்றன.
எங்கு பார்த்தாலும் கார்கள் குவியல், குவியலாக கிடக்கிறது. சுனாமியில் அடித்து செல்லப்பட்டவர்கள் உடல்கள் கடலில் மிதக்கின்றன. பல உடல்கள் கடற்கரையில் குவிந்து கிடக்கின்றன. இவற்றில் 300 உடல்களை மீட்பு படையினர் மீட்டு உள்ளனர்.
வீடுகளை இழந்தவர்கள் சுனாமி பாதிப்பு ஏற்படாத புறநகர் பகுதிகளில் தங்கி உள்ளனர். அவர்களுக்கு உணவு பொருட்களோ, குடிநீரோ கிடைக்கவில்லை. மின்சாரம் இல்லை.
தகவல் தொடர்புகளும் இல்லை. இதனால் ஊரில் உள்ள தங்கள் உறவினர்கள் கதி என்ன ஆனது என்று கூட தெரியாமல் தவிக்கின்றனர். மறுபடியும் தங்கள் வீடுகளுக்கும் செல்ல முடியாத நிலையில் இருக்கின்றனர்.
ஏன் என்றால் பெரும்பாலானோர் வீடுகள் இடிந்து விட்டன. வீடுகள் இடியாமல் இருந்தாலும் அங்கு செல்லும்பாதை முழுவதும் இடிபாடுகள் நிறைந்து கிடப்பதால் வீடு களுக்கு செல்ல முடிய வில்லை.
சென்டாய் நகரம் தற்போது மக்கள் வசிப்பதற்கே தகுதியற்ற இடமாக இருப்பதாக மக்கள் கூறுகின்றனர்.ஆயிரக்கணக்கான மீட்பு குழுவினர் சென்டாய் நகரில் குவிந்துள்ளனர்.
ஆனால் சேதம் அதிகமாக இருப்பதால் மீட்பு பணிகளை சரியாக செய்ய முடியவில்லை. மீட்பு பணிக்கு தேவையான எந்திரங்களை கொண்டு செல்லவும் சிரமமாக இருப்பதால் மீட்பு பணி மந்தமாக நடந்து வருகிறது.
வெளி இடங்களில் இருந்து எந்த வாகனமும் ஊருக்குள் வர முடியவில்லை. சாலைகள் முழுவதும் மரங்கள் விழுந்து கிடக்கின்றன. சுனாமியில் அடித்து வரப்பட்ட கார்களும், இடிபாடுகளும் சாலைகளை அடைத்து கிடக்கின்றன
நன்றி - தமிழ் CNN
தவறான செய்திகள் தொடர்பாக ஊடகவியலாளர்கள்
உரிய முறையில் பொறுப்பு கூறவேண்டும்
(பத்திரிகையாளர் சந்திப்பில் எம் .என் .அமீன் )
உரிய முறையில் பொறுப்பு கூறவேண்டும்
(பத்திரிகையாளர் சந்திப்பில் எம் .என் .அமீன் )
பத்திரிகைகளில் தவறான செய்திகள் பிரசுரிக்க படுவது தொடர்பாக ஊடகவியலாளர்கள் உரிய முறையில் பொறுப்பு கூற வேண்டும் என இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் தமிழ் பிரிவின் பொறுப்பாளர்
பொறுக்க முடியாத விலை வாசி
இலங்கையில் இன்று முக்கிய பிரச்சினையாக பேசபடுவது அத்தியாவசிய பொருகளின் விலை உயர்வு ஆகும். பொருகளின் விலை உயர்வு காரணமாக பெரிதும் பதிக்க படுபவர்கள் குறைந்த வருமானம் உடைய குடும்பங்களே ஆனால் இன்று இலங்கையில் அந்த நிலை மாறி அனைத்து சமுக மக்களும் பெரிதும் பாதிக்கபட்டு உள்ளனர். இது தொடர்பாக நரேன்பிட்டிய அடுக்கு மாடி குடியிருப்புகளில் வசிக்கும் மக்களிடம் கேட்ட பொழுது அவர்கள் தமது குடும்ப நிலைமைகளையும் விலைவாசி உயர்வால் தாம் அன்றாடம் எதிர் நோக்கும் பிரச்சனைகளை ஆதங்கத்துடன் வெளிப் படுத்தினர்..
தொழில் - வாகனம் திருத்துபவர் (ஆண்)
வயது - 52
"தம்பி எனக்கு தொழில் நன்றாக செய்ய தெரியும் ஆனால் எனக்கு வரும் வருமானம் அன்றாடம் சாப்பிடுவதற்கு சரியாக போகுது வாழ்கையில் எதையும் சேமித்துவைக்க முடியவில்லை. மாதம் முடிய கரண்ட் காசு தண்ணி காசு கட்டுறதுக்கு பணம் இல்ல. அரசாங்கம் பொருகளோட விலைய குறைச்ச நாங்க கொஞ்சம் நிம்மதியா இருப்பம்"
தொழில் - சாரதி (ஆண்)
வயது - 33
" பொருகளின் விலையானது ஒரேமாதிரியாக இருக்கிறது ஆனால் மக்கள் மூன்று வகையானவர்கள் இருகின்றனர் ( ஏழைகள், நடுத்தர வருமானம் உடையவர்கள், வசதி படைத்தவர்கள்) அவர்களின் வருமானத்திற்கு கட்டுப்படி ஆகின்றது போல பொருகளின் விலை இல்லை. வசதி படைத்தவர்களுக்கு அமைவாகவே பொருகளின் விலை காணபடுகிறது.
மக்களை சம்பள அடிப்படையில் தெரிவு செய்து வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும். யுத்தம் முடிந்தும் வடக்கு கிழக்கில் எந்த உற்பத்தியும்
நடை பெறவில்லை, வடக்கு கிழக்கில் நெல் தேங்காய் போன்ற உற்பத்தியை பெருகினால் கூடிய அளவு பொருகளின் விலையை குறைக்கலாம்
விலை வாசி உயர்வுக்கு அரசாங்கத்தை குறை கூற முடியாது அரசாங்கம் நாட்டை வளர்ச்சி பாதையிலே நடத்தி செல்கிறது"
தொழில் - சமையல் (ஓய்வு பெற்றவர்)
வயது - 83
"நாடு மோசமா போச்சு தம்பி. பணக்காரங்க இன்னும் இன்னும் பணக்காரன் ஆகிறாங்க ஏழைகள் இன்னும் இன்னும் ஏழைகள் ஆகிறாங்க எண்ட மகன் உழைகிறது அவனோட குடும்ப செலவுக்கே போதாது தம்பி
எனக்கு மாசம் 400 ரூபா குடுகிறாங்க அது ஒரு நாள் சாப்பிட கூட போதாது தம்பி 1 ராத்தல் பாண் 48 ரூபா தம்பி இந்த வயதில நான் எப்பிடி தம்பி சிவிகிறது மருந்து வாங்க கூட முடியல எல்லா மருந்தும் விலை கூடிபோச்சு. அரசாங்கம் சரி இல்ல தம்பி"
தொழில் - வீட்டு வேலை செய்பவர் ( பெண் கணவன் இறந்து விட்டார்)
வயது - .............
"தம்பி எனக்கு 2 பிள்ளைகள் நான் காலை சாப்பாடு சாப்பிடுறது இல்ல சாப்பிட காசும் இல்ல மத்தியானம் மட்டும் தான் சாப்பிடுவன் இரவும் பட்டினிதான். ஒரு பொருளும் வாங்க முடியல தம்பி அரசாங்கமே மக்களை பட்டினி போடுது. வாழ்க்கையை நடத்தி செல்ல முடியல, அரசாங்கம் மாறின எதாவது தீர்வு வரும் தம்பி"
தொழில் - பழைய பொருகள் விற்றல் (பெண்)
வயது - ...................
"தம்பி இந்த நாட்டில என்ன நடக்குது எண்டு புரியல அரசாங்கம் எங்கட நாட்டில உற்பத்தி ஆகிறது எல்லாத்தியும் வெளி நாட்டுக்கு அனுப்புது போல தேங்காய் கூட இந்தியால இருந்து இறக்குமதி செய்யிறாங்க. நாங்க கூட சபிட்டாம இருக்கலாம். குழந்தைகள் பவம் பால் மா விலை கூட கூடி போச்சு. இலங்கையில் பட்டினியால குழந்தைகள் சகபோற காலம் வரபோகுது தம்பி. இதுக்கு எல்லாம் அரசாங்கம் தான் பொறுப்பு சொல்ல வேணும், பிள்ளைகள் பசியோட பள்ளிக்கூடம் போய் படிக்கிறாங்க இல்ல, நாடு அபிவிருத்தி ஆகிறதுக்கு பதிலா பின்னோக்கி தான் போகுது"
சில மக்கள் அரசாங்கத்தில் தவறு இல்லை என்று சொன்னாலும் சில மக்கள் அரசாங்கத்துக்கு எதிராக தமது கருத்துகளையும் கண்ணீர்களையும் முன்வைத்து இருந்தாலும், மக்கள் விலைவாசி உயர்வை விரும்பவில்லை. அவர்களின் அன்றாட வாழ்க்கையை நடத்தி செல்வதற்கு கூட முடியாது திண்டாடுகின்றனர். பல மகளின் கதைகள் நெஞ்சை நெகிழ செய்கின்றது. குழந்தைகளுக்கு உணவளித்து தாம் பட்டினியாக இருக்கும் தாய்மார்களின் பேச்சு கண்களில் கண்ணீர்
பொங்க செய்கிறது. எனவே உற்பத்தியை பெருகியோ அல்லது சம்பளத்தை உயர்த்தியோ மக்களின் துயர் துடைக்க அரசாங்கம் முன்வர வேண்டும்.
by :- கபிலேஸ்வரன்(கபில்)
(21.01.2011)
பொலீசாரின் நவடிக்கை தொடர்பாக மக்கள் விசனம்
கொழும்பு மற்றும் கொழும்பை அண்டிய புறநகர் பகுதிகளில்
அதிகரித்து வரும் வீதி விபத்துக்களை தவிர்க்கும் முகமாக
மஞ்சள் கோட்டின் மீது வீதிகளை கடக்குமாறு
பொலீசார் தெரிவித்து வரும் நிலையில்
மக்கள் இது தொடர்பாக விசனம் தெரிவித்து வருகின்றனர்
முக்கிய இடம் ஒன்றுக்கு செல்ல வேண்டுமாயின் குறிப்பிட்ட
அந்த இடத்தில் மஞ்சள் கடவை இல்லை என்றும்
நீண்ட தூரம் நடந்து சென்று வீதியை கடந்து
மீண்டும் திரும்ப நடந்து வரவேண்டிய துர்பாக்கிய
நிலை காணப்படுவதாக பாதசாரிகள் விசனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த மாத இறுதி பகுதியில் மஞ்சள் கடவை தவிர்ந்த
ஏனைய இடங்களில் வீதியை கடந்த 80 மேற்பட்ட பாதசாரிகள்
கைது செய்யப்பட்டு நீதி மன்றத்தில் ஆஜராகும் படி கூறி பின்னர்
விடுவிக்க பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. (9.02.2011)


