கட்டுரைகள்

                                                               பேய் இருக்கா??????
                                                                  ( 1.06.2011கபில்)



நள்ளிரவில் யாருமே இல்லாத மனிதர்களை புதைக்கின்ற ஒரு இடு காட்டின் நடுவே நீங்கள்..... உங்கள் கையில் ஒரு மண்வெட்டியுடன் சவகிடங்கை தோண்டுகின்றீர்கள். அந்த நடு நிசியில் மண்வெட்டி மண்ணை வெட்டும் சத்தம் மட்டும் தான் கேட்கிறது . தோண்டி எடுக்கபட்ட சவப் பெட்டியை நீங்கள் திறக்கின்றீர்கள், அதனுள் இருந்து அரை குறையாக அழுகிய பிணம் ஒன்று எழுந்து  தனது கையால் தன் உடலை தானே பிய்த்து தின்கிறது. அலறிக்கொண்டு   கண்விழிகின்றீர்கள். நேரம் உண்மையிலேயே இரவு 12 .00 மணி அப்போது உங்கள் நிலை எப்படி இருக்கும்? அந்த இருட்டில் உங்கள் கண்கள் எதனை தேடும்? மறுபக்கம் திரும்பி படுத்து விடு வீர்களா?
                                         பயம் எந்த மனிதனாக இருந்தாலும் அந்த நேரத்தில் நிச்சயமாக பயப்படுவான், நீங்கள் பயப்படுவீர்களா? அப்படியானால் நீங்கள் எதற்கு பயப்பட்டுகின்றீர்கள்? மனிதனை விட மனித உருவம் கொண்ட எதோ ஒன்று இந்த உலகத்தில் இருப்பதை நீங்கள் நம்புகின்றீர்களா? அப்படியானால் அது என்ன? அது தன் பேயா?
அந்த பேய்க்கு தான் நீங்கள் பயப்படுகின்றீர்களா?
உண்மையில் பேய் இருக்கிறதா?
அது எப்படி இருக்கும்?
ஏன் பேய் இந்த உலகத்தில் அங்கும் இங்கும் அலைகின்றது?
 இது போன்ற கேள்விகள் உங்களுக்குள் எழுவது இல்லையா?
                                   செவ்வாய்க்கு ராக்கட் அனுப்பும் நாசா வெண்வெளி வீரர்களுக்கும் பேய் பிசாசு தொடர்பான நம்பிக்கை இருக்கிறது. ஆனால் அவர்களின் பேய் கோட் சப்பாத்து அணிந்து மிகவும் அழகாக இந்த உலகத்தை வலம் வருகின்றன, ஆனால் நம்நாட்டு பேய்களின் நிலைமை மிகவும் கஷ்டமான நிலை. தலை சீவ ஒரு சீப்பு கூட இல்லாமல் தலை முடியை விரித்து போட்டு கொண்டு உலாவுகின்றன. தமிழிலும் ஆங்கிலத்திலும் பேய் படம் பார்த்தவர்களுக்கு இது தெரிந்திருக்கும், நம் நாட்டு பேய்களுக்கு கிராம வாழ்க்கைதான் மிகவும் பிடிக்கும் என்று நினைகின்றேன். அநேகமான பேய்கள் கிராமத்தில் தான் வசித்து வருகின்றன, எமக்கு பேயை கண்டால் பயம் பேய்க்கு எம்மை கண்டால் பயம். ஏன்னென்றல் பேய் எமக்கு பின்னால் வந்து பிரடியில் அடித்து விட்டு ஓடிவிடும். இதை தான் கிராமங்களில் பேய் அடித்து விட்டது என்று கூறுகின்றனர். சிறுவயதிலிருந்து எமக்குள் திரும்ப  திரும்ப சொல்ல படுகின்ற சில நம்பிக்கைகள் பேய் என்ற ஒன்று இந்த உலகத்தில் இருக்கிறது என்ற நம்பிக்கையை எமக்குள் வலுப்படுத்தி விட்டது
                                    பேய் என்ற ஒன்று இந்த உலகத்தில் இருக்கிறது அதை நாம் தீய சக்தி என்று சொல்கின்றோம், இந்த ஜென்மத்தில் அடங்காத ஆசைகளுடன் அவல சாவுகளை எதிர்கொள்ளும் மனிதர்கள் ஆவிகளாக இந்த உலகத்தை வலம் வருகின்றார்கள். பேய் இல்லை என்று கூறுபவர்களிடம் நன் ஒரே ஒரு விடயம் தான் சொல்கின்றேன், காற்றினை நாம் சுவாசிக்கின்றோம் அது உலகம் முழுவதும் வியாபித்து இருக்கிறது, ஆனால் அதை நாம் பார்க்க முடியாது, அதற்காக காற்று இல்லை என்று சொல்லி விட முடியுமா? அது போலத்தான் அவல சாவுகளை எதிர்நோக்கி அடங்காத ஆசைகளுடன் அந்தரிக்கும் ஆவிகளையும் நாம் கண்களால் காண முடியாது. தமது ஆசைகள் நிறைவேறும் வரை இந்த பூமியை வலம் வரும். அவைகளின் ஆன்மாக்களை சாந்தியடைய செய்வதற்காக தான் மரணம் நிகழ்ந்த பின்னர் படைத்தல், ஆண்டுக்களிவு போன்ற சடங்குகளை செய்கின்றோம் அவ்வாறு செய்தால் ஆன்மாக்கள் சாந்தி அடைந்து மறுபிறப்பெடுக்கும் இல்லை என்றால் குடும்பத்தினருக்கு பல தொல்லைகளை கொடுக்கும். அவ்வாறான கெட்ட ஆன்மாக்களை காளி வைரவர் போன்ற தெய்வங்களின் துணை கொண்டு விரட்டலாம், மனிதனை விட ஆன்மாக்கள் மிகவும் பலம் வாய்ந்தவை ஆனால் தெய்வத்தின் முன்னால் அவற்றின் சக்தி குறைந்து விடும். மந்திர உச்சாடனங்களை பயன்படுத்தி துஷ்ட ஆன்மாக்களை  அடிபணிய வைக்கலாம்"
                                             . பேய்க்கு துஷ்டஷக்தி என்ற பெயரை கொடுத்து பேய் என்பது உண்மை என்று தனது கருத்தை கூறினார் பேய் விரட்டும் மற்றும் பேய்க்கு நூல் கட்டும் இளைஞன் சிவா. கேட்ட போது கொஞ்சம் நடுக்கம் எடுத்து விட்டது, சிவா பற்றி கூறியவர்கள் அவர் இளம் வயது உடையவராக இருந்தாலும் இந்த விடயங்களில் மிகவும் கெட்டிக்காரன் என்றே கூறினார்.
                                        இந்து சமயத்தில் நான்காவது வேதமாக போற்றப்படும் அதர்வண வேதமும் பேய், பில்லி, சூனியம், மந்திரம், தந்திரம் பற்றி கூறி உள்ளது. மந்திரங்களை பயன்படுத்தி தீய சக்திகளை உருவாக்கவும் அழிக்கவும் முடியும் என்பது அதர்வண வேதத்தின் படி நாம் நடைமுறையில் கண்ட உண்மை, தற்போது கிராமங்களில் காணப்படுகின்ற "பார்வை பார்த்தல்" ஆயுள்வேத  மருத்துவம் என்பனவும் அதர்வண வேதத்தின் உண்மை தன்மையையே குறி காட்டி நிற்கின்றது.
                        பேய் பற்றிய நம்பிக்கைகள் உலகில் எங்கும் பரந்து காணப்படுகிறது. ஆதி காலத்தில் இருந்தே எம்மவருக்கு பேய் நம்பிக்கை இருந்ததை குகை ஓவியங்கள் வெளிக்காட்டி இருக்கின்றன. இந்துகள் பேயை "ஆவி" என்றும் கிறிஸ்தவர்கள் பேயை "சாத்தன்" என்றும் முஸ்லிம்கள் பேயை "சைத்தான்" என்றும் சிங்களவர்கள் பேயை "யக்கா" என்றும் அழைகின்றனர் பேய் பற்றிய நம்பிக்கை எமக்குள் வலுவடைந்து செல்கின்றது. பேய் பற்றி கொஞ்சம் சொலுங்களேன் என்று பேய் பற்றிய பல ஆய்வுகளை மேற்கொண்ட வைத்தியர் உதயசங்கரிடம் கேட்ட போது .
                             பேய் பற்றிய நம்பிக்கைகள் உலகில் எங்கும் பரந்து காணப்படுகிறது. ஆதி காலத்தில் இருந்தே எம்மவருக்கு பேய் நம்பிக்கை இருந்ததை குகை ஓவியங்கள் வெளிக்காட்டி இருக்கின்றன. இந்துகள் பேயை "ஆவி" என்றும் கிறிஸ்தவர்கள் பேயை "சாத்தன்" என்றும் முஸ்லிம்கள் பேயை "சைத்தான்" என்றும் சிங்களவர்கள் பேயை "யக்கா" என்றும் அழைகின்றனர். பேய் பற்றிய நம்பிக்கை எமக்குள் வலுவடைந்து செல்கின்றது. பேய் பற்றி கொஞ்சம் சொலுங்களேன் என்று பேய் பற்றிய பல ஆய்வுகளை மேற்கொண்ட வைத்தியர் உதயசங்கரிடம் கேட்ட போது .
                             "பேய் என்பதை நான் நம்பவில்லை எமது உடலில் இருந்து எதோ ஒன்று சென்று அது  பேயாக அலைகின்றது என்பதும் பொய்யான ஒரு கூற்று,  உடல் என்பதும் உயிர் என்பது வேறு வேறு இல்லை இரண்டும் ஒண்டு தான். எமக்கு மிகவும் நெருக்கமான உறவுடைய ஒரு நபர் திடீர் என்று இறந்து விடுகின்றார் அல்லது தற்கொலை செய்து கொள்கின்றார் என்று வைத்து கொள்வோம், அவரை எம்மால் மறக்க முடியுமா? இரண்டு மாதம் பழகிய உங்கள் காதலி அலது காதலன் திடீர் என்று உங்களை எமாற்றி சென்று விட்டார்கள், அந்த பிரிவை உங்களால் தாங்க முடியுமா? எந்த இடம் சென்றாலும், அவர் கொடுத்த ஒவ்வொரு பொருளை பார்க்கும் போதும் அவர் நினைவு வருகிறது தானே. அது போல நீங்கள் நேசித்த ஒருவர் இனி பார்க்கவே முடியாத இடம் சென்று விட்டார் என்றால் உங்கள் மனம் எப்படியான வேதனையை எதிர் நோக்கும்?  அந்த வேதனையின் வெளிப்பாட்டின் காரணமாக தான் இறந்தவரின் உருவம் உங்களுக்கு தெரிவது போல தோன்றுகின்றது. அது வெறும் மன பிரமையே. தெளிவாக உங்களுக்கு கூற வேண்டுமால்  அண்மையில்  ஒரு விபத்து நடந்தது  அதில் ஒரு சிறுமி மரணம் அடைந்தாள், அவளுக்கு நண்பி ஒருத்தி இருந்தாள். சிறு வயதில் இருந்தே இருவரும் நெருங்கிய நண்பர்கள். நண்பி இறந்த பின்பு, மற்றைய சிறுமி இறந்த தனது நண்பியின் நினைவாக அவளுடன் தனியாக பேசுவது, தனியாக அறையில் விளையாடுவது போல பல செயற்பாடுகளில் ஈடுபட்டாள். அத்துடன் தனது தாயிடம் இருந்து விலகி சென்றாள். இதனை அவதானித்த அவளது தாய் அவளுடைய உடலில் எதோ ஒன்று இருப்பதாக நம்ப ஆரம்பித்தாள்.  அயலவர்களின் ஆலோசனை படி மனநல வைத்தியரிடம் தனது மகளை அழைத்து சென்றாள், விடயம் புரிந்த வைத்தியர் இறந்த  சிறுமியின்  தனியான சில செயற்பாடுகளை கேட்டு அறிந்துள்ளார், அதாவது தனது மகளிடம் தாய்க்கு மட்டும் தெரிந்த விடயங்களை கேட்டு தெரிந்த பின்னர், மற்றைய சிறுமியை அழைத்து அவ்விடையங்களை கேட்டுள்ளார். ஆனால் சிறுமி சொல்லிய விடயங்கள் தவறானவை, உதாரணமாக இறந்த சிறுமிக்கு பிடித்த ஆசிரியர் வேறு ஒருவர்,  மற்றைய சிறுமிக்கு பிடித்த ஆசிரியர் வேறு ஒருவர். எனவே வைத்தியர் அந்த சிறுமியின் உடலில் எதுவுமே இல்லை என்பதை இரண்டு தாய்க்கும் புரிய வைத்துள்ளார். மரம் மாடு ஆடு போல தான் நாமும் எமக்கும் எமது உடலில் அணைத்து அங்கமும் செயல் இழந்ததும் நாமும் இறந்து விடுவோம். மரம் மாடு ஆடு எல்லாம் பேயாக அலைகிறதா? இல்லை தானே எமது உடலின் செயற்பாடு எல்லாம் முடிந்த பின்பு எமது செயற்பாடு முடிகிறது. அதன் பிறகு நாம் பேயாக அலைகின்றோம் என்பது பொய்" இது வைத்தியரின் கருத்து,
                                நாணயத்துக்கு இரண்டு பக்கம் போல இந்த பேய்க்கும் இரண்டு பக்கம் தான் சிலர் நம்புகின்றனர் சிலர் நம்புவது இல்லை, நம்புபவர்கள் சாமிகளின் கருத்தை பெரிதாக நினைப்பவர்கள், நம்பாதவர்கள் வைத்தியரின் கருத்தை பெரிதாக நினைப்பவர்கள், ஆனால் ஒரே ஒரு கேள்வி தான் உங்களிடம், பிண அறையில் எப்போதாவது பேய் வந்தது என்று வைத்தியராவது கூறி உள்ளாரா? ஆடு மாடு மரம் எல்லாம் பேய்க்கு பயப்படுகின்றதா? மனிதர்களாகிய நீங்கள் ஏன் பேய்க்கு பயபடுகின்றிர்கள்?... நாம் இப்போது 21 ம் நூற்றாண்டில் கால் பதித்துள்ளோம்....
                                                                                                      
                                                                                       ப. கபிலேஸ்வரன்                                                                                                                         





                                                காதல் தேவைதானா....?

                                                (22.04.2011-4.45-----கபில்)

 உலகெல்லாம் ஒரு சொல் காதல் ஒரு சொல்லில் உலகம் காதல்.. நீங்கள் காதல் செய்திருகிறீர்களா? நீங்க காதல் பற்றி என்ன நினைகிறீங்க? காதல் என்பது உண்மையா? ஆணுக்கும் பெண்ணுக்கும் அன்பையே போதிக்கும் காதல் தினமும் எமக்கு தேவையா? காலத்தின் மாற்றத்தால் காதலின் புனிதமும் சீர் குலைந்து விட்டதா? உண்மையில் காதல் என்றால் என்ன?

          காதலாவது கத்தரிக்காயாவது சும்மா போங்க என்று சிலர் புறக்கணித்து செல்ல சிலர் ஆர்வத்துடன்......

                   "நான் 4  வருடமாக ஒருவரை காதலிக்கிறேன் அவர் இப்போது வெளிநாட்டில் இருக்கிறார் , நான் அவரை தான் திருமணம் செய்யப் போகிறேன், எனது கஷ்டங்களை பகிர்ந்து கொள்வதற்கு காதல் எனக்கு மிகவும் துணையாக உள்ளது. பெற்றவர்களிடம் அidத்து விடயங்களையும் கூற முடியாது ஆனல் காதலனிடம் அனைத்தையும் பகிர்ந்து கொள்ளலாம்" "( பெயர் கே. ஜெசித்தா எனது வயது 21)  என்கிறார்"

                    பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளுக்கும் உங்களுக்கும் இடையில் ஏன் இந்த இடை வெளி?

                     இறைவனுக்க மாலை வாங்க என் கடைக்கு வந்த பெண்ணை நான் காதலித்தேன் அவரையே திருமணமும் முடித்தேன் இப்போது மிகவும் சந்தோசமாக அவளோடு வாழ்ந்து வருகிறேன், காதல் என்பது அனைவருக்கும் வர வேண்டும் அனைவரும் காதல் செய்ய வேண்டும் ஆனால் உண்மையாக காதலிக்க வேண்டும் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் யாரும் காதலில் ஏமார கூடாது ஏமாற்றவும் கூடாது, காதல் என்பது மிகவும் புனிதமான உறவு இனம் மதம் மொழிகளை கடந்தது அது எப்போதும் உண்மையானதாக இருக்க வேண்டும் பூமாலை கடை நடத்தும் இளைஞன் தன் அனுபவத்தை எவ்வாறு முன்வைத்தார்

             ஐயோ காதலா வேணாம் வேணாம் நண்பர்களே காதலே பண்ண வேண்டாம் காதல் செய்தவரையே திருமணம் முடித்தவள் நான், அவருக்காக என் குடுபத்தையே எதிர்த்து வீட்டை விட்டு வெளியில் வந்தவள், எங்கள் திருமணமும் நல்ல படியாக நடந்தது, ஆனால் இன்று அவர் வெளிநாடு போய் விட்டார் அவர் இப்போது என்மீது முதலில் இருந்தது போல அன்பு இல்லை என்னை நேசிப்பது குறைந்து விட்டது. நான் இப்போது கவலை படுகிறேன், எனது பெற்றோர்களை எதிர்த்து வந்ததை நினைத்து கவலை படுகிறேன் என்னை போல யாரும் கஸ்ரபடக்கூடாது. பெற்றோர்கள் பேசி திருமணம் செய்து வைக்கும் பெண்ணையோ அல்லது ஆணையோ திருமணதிற்கு பிறகு காதலிப்பதே சிறந்தது. காதல் என்கின்ற பெயரில் இளம் சந்ததியினர் சீரழிந்து போகக்கூடாது. காதலினால் தனது வாழ்கை தொலைந்து விட்டது என்கிற காதலினால் காயம் பட்ட குமுதா(பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது)

                                          இந்த திருமண பந்த உறவு பிரிந்து போனதற்கு காரணம்  என்ன? பலவருடம் பேசி பழகிய காதல், புரிந்து கொண்டு திருமணம் முடித்த பின்னர், இன்று பிரிந்து ஒருவர் இனொருவரை குறை கூற கரணம் என்ன? இதற்கு முழுக்காரணம் இளமைக் காதலே, படிக்கிற வயதில் பாடசாலை சென்று கல்வி பயின்று வரும்படி பெற்றோர் அனுப்பினால் அங்கு சென்று தமக்கான வாழ்கை துணையை தேடிக்கொள்கின்றனர். வாழ்கையில் பிடிப்பு ஏற்ப்பட்டு வாழ்கையில் சாதிக்க வேண்டிய வயதில் சில இளவயதினர் கழுத்தில் கயிற்றை மாட்டிக்கொண்டும் சிலர் வாயில் விசத்தை உற்றிக்கொண்டும் சிலர் நீர் நிலைகளை தேடிக்கொண்டும் தமது உயிர்களை மாய்த்துக் கொள்கின்றனர்.

                        ஏப்ரல் 1 4 என்றால் குழநதைகள் கூட ரோஜா மலரை தூக்கிக் கொண்டு கடல் கரைக்கு சென்று விடுகிறது தன் காதலரை தேடி, அம்மா அப்பாவின் பிறந்த தினத்திற்கு 500 ரூபாய்க்கு ஒரு சட்டை வாங்கி குடுக்காத பிள்ளைகள் காதலர் தினம் என்றதும் பெற்றோர்களிடம் பணம் வாங்கி காதலர் தினப் பார்டிக்கு செலவழிக்கின்றனர். வாழ்கை செலவு தலைக்கு மேல் அதிகரித்துள்ள நிலையில் தாம் படுகின்ற துன்பம் தாம் பிள்ளைகள் படக்கூடாது என்ற நோக்கத்துடன்  பணம் கொடுத்து படிபதற்காக தனியார் வகுப்புக்களுக்கு அனுப்பினால் அங்கு காதல் என்ற பெயரில் தமது வாழ்க்கையை சீரளிதுக் கொள்கின்றனர். இளவயதில் காதல் காதல் என்று உங்கள் வாழ்கையை சீரழிக்கும் மாணவ சமுதாயமே கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்
            காதல் இல்லை என்றால் வாழ்கை இல்லை என்று கூறுபவர்களின் மத்தியில், எனது வாழ்கையே காதலினால் தான் அழிந்தது என்று கூறும் இக்கருத்து உண்மையானதா? ஏற்க முடியுமா....? ஏற்று தான் ஆக வேண்டும் நாணயத்திற்கு இரு பக்கம் போல காதலுக்கும் நிச்சயம் இரு பக்கம் இருக்கிறது. காதல் என்றால் என்ன? ஏன் காதல் வருகிறது? காதல் எப்படி உருவாகிறது? புரியாத கேள்விதான்.

 'ஆனால் காதல் என்பது வெறும் உணர்வு தான் காதல் எமது உடலில் சுரக்கின்ற ஓமோனின் செயற்பாடே இந்த காதல் எமது உடலில் நடை பெறும் ஒவொரு தொழிற்பாட்டுக்கும் உடலில் சுரக்கின்ற ஓமோன் தான் காரணம் அது போல காதல் எனும் உணர்வு மனதில் தோன்றுவதற்கும் ஓமோன் தான் காரணம் நாம் பிறந்ததில் இருந்து யாராவது ஒருவரை காதலித்துக் கொண்டே இருக்கின்றோம். பிறந்தவுடன் அம்மாவை காதலிக்கிறோம் பின்னர் அப்பா சகோதரர்கள் நண்பர்கள் பூனை நாய் கிளி இயற்கை இரவு அருவி என்று உலகில் உள்ள அனைத்தையும் காதலிக்கின்றோம், எமக்கு துன்பத்தை தரும் விடயங்களை நாம் விரும்புகின்றோமா? எமக்கு துன்பம் செய்பவர்களை நாம் விரும்புகின்றோமா? இல்லை தானே அதோ போல தான் காதலும் ஆரம்பத்தில் அம்மா அப்பாவிடம் உருவாகும் காதல் நாம் வாலிப பருவத்தை அடைந்ததும் எமக்குள் சுரக்கும் ஓமோன் காரணமாக பால் ரீதியான காதல் உருவாகின்றது காதல் என்பது உடலில் ஏற்படுகின்ற ஒரு மாற்றம் தான் ஒரு உணர்வு மட்டும் தான். காதலுக்கும் உடலில் சுரக்கின்ற ஓமோன்களுக்கும் தொடர்பு உண்டு. ஓமோன் மூலம் துண்டபடும் ஒரு உணர்வே காதல் ஆகும். காதல் பற்றி அறிவு ரீதியாக தனது கருத்தை முன்வைத்தார் வைத்தியர் உதயசங்கர்.

                           அப்படியானால் காதல் என்றால் என்ன?

                          "வணக்கம் அண்ணா நான் பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு நேயர். என் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம் ஒன்று அண்மையில் நடந்தேறியது அதை நான் இந்த நிகழ்ச்சியில் கூற விரும்புகிறேன். 6 மாதத்திற்கு முன்னர் எனக்குத் தெரியாத நம்பர் ஒன்றில் இருந்து மிஸ்கால் வந்தது நான் ஒரு பெண் என்பதால் அதனை பொருட்படுத்தவில்லை ஆனால் தொடர்ந்தும் அந்த இலக்கத்தில் இருந்து அடிக்கடி மிஸ்கால் வர ஆரம்பித்ததால். நான் அந்த இலக்கத்திற்கு கால் பண்ணி பேசினேன் ஒரு ஆண் என்னுடன் பேசினார். அவர் என்னுடன் நீண்ட காலம் பழகியவர் போல அன்பாகவும் மிகவும் அக்கறையாகவும் பேசினார். நான் ஒரு பெண்ணை லவ் பண்ணினான் அவள் என்னை எமாற்றி விட்டாள் என்று தனது காதல் கதையைக் கூறி மிகவும் பரிதாபமாக பேசினார். அவருடைய கதையை கேட்டு அவர் மீது இரக்கப்பட்டு அவர் மீது அன்பு காட்டி அவர் பேசியது போலவே அன்பாக பேசி பழகினேன். திடீர் என்று ஒரு நாள் அவர் என்னை லவ் பண்ணுவதாக கூறினார். ஆரம்பத்தில் நான் அதை மறுத்துவிட்டேன். அதனால் அவர் தன்னுடைய நண்பர்களை என்னுடன் பேசவைத்தார். நான் அதற்கும் மறுத்து விட்டேன் ஆனால் அவர் விடவில்லை நீங்கள் இல்லா விட்டால் நான் இறந்து விடுவேன் என்று கூறி ஒருவாறு என் மனதை மாற்றி விட்டார் செல்போனிலேயே எங்கள் உறவு காதலாக மலர்ந்தது. அம்மா, செல்லம் என்று தான் அவர் என்னுடன் பேசுவார். ஒரு நாள் கூட என்னுடன் கோபமாக பேசியது இல்லை. மிகவும் நல்லவர் ஆனால் இப்போது அவர் என்னுடன் பேசுவது குறைந்து விட்டது, ஒருமுறை நான் கால் பண்ணினபோது அவர் நம்பர் வேயடிங்கில இருந்திச்சு, அவர் பிறகு கால் பண்ணும் போது யார் உங்களோடு பேசினது என்று கேட்டன். அதற்க்கு அவர், தான் முதல் லவ் பண்ணின பெண் திரும்பவும் தனக்கு திரும்பவும் கால் பண்ணுவதாக கூறினார், தன்னை மறந்து விடும்படியும், தன்னை நினைத்து வேதனை படவேண்டாம் சாப்பிடுங்க நான் உங்கட வாழ்கையில வந்ததையே மறந்துடுங்க சந்தோசமா இருங்க என்று எனக்கு ஏதேதோ அறிவுரைகள் கூறி விட்டு கால் கட் பண்ணிட்டாரு, அதற்குப் பிறகு நான் பல தடவை கால் பண்ணினேன் ஆனால் அவர் எடுக்கவே இல்லை , எனக்கு என்ன செய்வது என்று புரியவில்லை அண்ணா அவர் முகம் கூட எனக்கு தெரியாது அவர் மீது இரக்கப் பட்டுத் தான் லவ் பண்ணினான். அவர் இந்த நிகழ்ச்சியை கேட்டுக்கொண்டு இருக்கனும் என்னுடன் மீண்டும் அவர் பேச வேணும். நான் அவரோட சேர்ந்து வாழ ஆசைபடுறான்."

                                                      இலங்கையின் பிரபல தனியார் வானொலி ஒலிபரப்பு சேவையில் நினைவுகளை மீட்டி பார்க்கும் இரவு நேர நிகழ்ச்சியில் பேசிய பெண் நேயரின் உள்ளக் குமுறலே இது. புறா தூது சென்ற சங்ககால தமிழ் காதல், அன்னம் தூது சென்ற நளனின் உயிர் காதல், கிளி தூது சென்ற திருநவுகரசரின் தெய்வீக காதல், என்று அழகான உண்மையான இயற்கையோடு ஒன்றித்த காதல்கள் கலைந்து செல்போன் காதல், இன்ரநெட் காதல், எஸ் எம் எஸ் காதல், முகம் பார்க்காத காதல், பேஸ்புக் காதல், என்று காதல் இன்று பல புதிய வடிவங்களில் புத்துயிர் பெற்றுவிட்டது.... இந்த நிலையில் நாம் எந்த காதலை உண்மையாக கருதுவது? வயது முதிர்ந்த பின்னர் மலர்கின்ற காதலா உண்மையானது? அல்லது பள்ளிக்காலத்தில் மலர்கின்ற காதல் வெற்றிபெறுமா? படிக்க வேண்டிய வேண்டிய வயதில் காதல் செய்வது சிறந்ததா? முடிவு உங்கள் கையில் தான்..

                                                                                                            ப. கபிலேஸ்வரன் 



ஊர்க்கடிதம் ..
               தபால்காரன்
 ஐயா  கடிதம் வந்திருக்கு ..
படிச்சு சொல்லு தம்பி ...
ஐயாக்கு நான் எழுதிக்கொள்வது இந்தியாவில  அம்மையார்
 ஆட்சிக்கு வந்தது . இலங்கை தமிழினத்திற்கு விடிவு கிடைக்குமா
எண்டு கேட்டு இருந்தியள் எனக்கு அதில பெரிசா நம்பிக்க இல்ல,
உதெல்லாம் சும்மா அரசியல் நாடகம் எண்டு தான்  தோணுது.
 அம்மாக்கு எதோ திடீர் ஞானம் பிறந்துட்டு எண்டு தான்
நினைக்கிறான். ஆட்சிக்கு வந்த முதல் நாள் இலங்கை ஜனாதிபதியை
குற்றவாளி கூண்டில நிறுத்துவேன் எண்டு வீர வசனம் பேசின அம்மா
 இப்ப சொல்லறா மாநில அரசாங்கதால எதையும் செய்ய முடியாது எண்டு.
 உவா ஏன் உப்பிடி பேசிக்கொண்டு இருக்கிறா எண்டு எனக்கு சரியாய்
விளங்கேல. . ஆனா ஒண்டு மட்டும் சொல்றன் அம்மா இந்த ஆட்சியில
 இலங்கை தமிழ் இனத்துக்கு எதுமே செய்யாட்ட இந்திய தமிழ் சனம்
 உவாவ சும்மா விடாது. ஐயா கருணாநிதிக்கு நடந்தது தான் உவாக்கும்
 நடக்கும். இப்ப தமிழ் நாட்டு சட்டசபையில இலங்கைக்கு எதிராக
பொருளாதார தடை போடா வேணும் எண்டு தீர்மானம் நிறைவேற்றி
இருக்கிறா அம்மா. ஐயாட கட்சியும்  அதுக்கு முழு ஆதரவு தாறதாக
சொல்லி இருக்காம். சத்தியமா சொல்றன் ஐயாட கட்சியோட கதைய நம்ப
முடியாது. குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு என்றது போலத்தான் தி.மு.க வின்
பேச்சு. ஆனாலும் தி.மு.க ஆட்சியில் நடந்தது போல கொடுமைகள் அம்மா
ஆட்சியில்  ஈழ தமிழ் மக்களுக்கு நடக்காது எண்டு நான் உறுதியா
சொல்லுவான். அம்மா அடிக்கடி முடிவை மற்றது ஒரு முடிவில உறுதியா
இருக்க வேணும். ஆனாலும் இந்திய ஆட்சி மாற்றத்தால் இலங்கை அரசாங்கம்
கொஞ்சம் தடுமாறி போய் தான் இருக்கிறது இதன் ஒரு கட்டமாக தான்
வெளியுறவுத்துறை அமைச்சரை இந்தியாக்கு அனுப்பி உதவி கோரியது.
ஆனால் சாதகமான பதில் ஏதும் கிடைக்கவில்லை போலத்தான் தெரிகிறது
 தற்போது அம்மா டெல்லிக்கு மன்மோகன் சிங்கை சந்திப்பதற்காக
 சென்றுள்ளார். தமிழக மீனவர்களின் பிரச்சனைகள், இலங்கை தமிழர்களின்
 பிரச்னை உள்ளிட்ட பல பிரச்சனைகள் பற்றி ஆராயப்படும் என எதிர்பார்க்க
படுகிறது. இந்த சந்திப்பின் போது இலங்கை தமிழர்கள் தொடர்பாக இந்த
ஒரு விடயமும் பேசப்படாவிட்டால் ஈழ தமிழர்கள் பிரச்சனையில்
இந்தியாவின் உதவியை எதிர்பார்க்க முடியாது. இந்தியா முன்வைத்த
13 வது சீர்திருத்தத்தை கூட நடைமுறை படுத்த இலங்கை தயங்கி நிற்கிறது.
 சீனா ரஷ்யாவின் உதவியுடன் இந்தியாவை தனக்கு கீள் கொண்டு வரும்
திட்டதில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டிருகிறது,   தமிழ் நாட்டின் அழுத்தங்களும்
  இந்தியாவின் முடிவுகளுமே இலங்கை தமிழர்களுக்கு நல்ல முடிவை
பெற்று கொடுக்கும். இது நடப்பது அம்மையாரின் மாறாத  முடிவுகளிலே
 தான் தங்கி நிற்கிறது.. எனக்கு பெரிசா நம்பிக்க இல்லதான் பாப்பம் என்ன
கூத்து  நடக்குது எண்டு.பேந்து கடிதம் போடுறன் இப்ப கொஞ்ச கடிதம்
போடுற வேலை இருக்கு போட்டுவாறன்..
                                     p.கபில்