எட்டுத்தொகை நூல்கள்:
1. நற்றிணை2. குறுந்தொகை
3. ஐங்குறுநூறு
4. பதிற்றுப்பத்து
5. பரிபாடல்
6. கலித்தொகை
7. அகநானூறு
8. புறநானூறு
பத்துப்பாட்டு நூல்கள்:
1. திருமுருகாற்றுப்படை2. பொருநராற்றுப்படை
3. சிறுபாணாற்றுப்படை
4. பெரும்பாணற்றுப்படை
5. கூத்தாராற்றுப்படை (மலைபடுகடாம்)
6. மதுரைக் காஞ்சி
7. முல்லைப்பாட்டு
8. குறிஞ்சிப் பாட்டு
9. நெடுநல்வாடை
10. பட்டினப்பாலை
நட்பு
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத் ( கண்ட இடத்திலேயே முகம் மட்டும் மலரும் படி தோன்றும் நட்பு உண்மையான நட்பு அல்ல..)
(நெஞ்சத்) தகநக நட்பது நட்பு (உண்மை அன்பால் அகம்(உள்ளம்)மலர பிறக்கின்ற நட்பே உண்மையான நட்பு) கரணம் ; முகத்தில் தோன்றும் புன்னகை உடனே மறைத்து விடும் ஆனால் நெஞ்சில் தோன்றும் உண்மை அன்பு நெஞ்சு அழியும் வரை (நாம் இறக்கும் வரை) அழியாது...
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே (அவை நடுவே உடை (ஆடை) இழந்தவனுக்கு அக்கணமே சென்று உதவி புரிவது போல......)
இடுக்கண் களைவதாம் நட்பு (நண்பணுக்கு துன்பம் வந்தால் அக்கணமே சென்று. அத்துன்பத்தில் இருந்து அவனைக் காப்பதே உண்மையான நட்பு..
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் (உள்ளத்தில் உண்மையான அன்பில்லாதவர்கள் அனைத்துப் பொருட்களும் தமக்கே உரியது என்ற என்ற எண்ணம் உடையவர்களாக இருப்பார்கள்)
(அன்புடையார்) என்பும் உரியர் பிறர்க்கு (அவ்வாறன்றி உள்ளத்தில் உண்மையான அன்புடையவர்கள் தம் உடலில் உள்ள எலும்பை கூட பிறருக்காக கொடுத்து விடுவார்கள்
ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
( தன்னை இகழ்வார் பின்னே வறுமையுற்ற ஒருவன் சென்று. அவர்களிடம் பொருள் பெற்று வாழ்ந்தான் என்பதை விட)
(அந்நிலையே) கெட்டான் எனப்படுதல் நன்று
(அந்த வறுமையின் காரணத்தால் அவன் இறந்தான் என்பது மேன்மையானது)
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே (ஒருவனை ஒருவன் தீயினால் சுட்ட காயத்தின் அடையாளம் உடலிலே இருந்தாலும்' மனதளவில் அது உடனே ஆறி விடும்)
(ஆறாதே) நாவினாற் சுட்ட வடு (ஆனால் ஒருவனை ஒருவன் கொடிய வார்த்தைகளைக் கொன்டு வஞ்சித்தமையால் அவன் மனதில் உண்டான காயம் என்றும்(உடல் அழியும் வரை ) ஆறாது....

இராஜராஜ சோழன்
பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், 985 இல் உத்தம சோழன் இறந்தபின்னர், சுந்தர சோழனின் இரண்டாவது மகனான இராஜராஜன் மன்னனானான்.இவனுக்கு அருள்மொழிவர்மன், ரிஷிவர்மன் என்று பெயர்கள் வழங்க பட்டதாக அழகர் கோவில் கல்வெட்டுகளில் இருந்து அறியப்படுகிறது. இவன் காலத்தில் சோழநாட்டின் வலிமை பெருகியது. நான்கு பக்கங்களிலும் சோழநாட்டின் எல்லைகள் விரிந்தன. இவற்றுக்காக இராஜராஜன் நடத்திய போர்கள் பல. பாண்டி நாட்டின் மீதும், சேர நாட்டின் மீதும் போர் தொடுத்து, பாண்டிய மன்னன் அமரபுயங்க பாண்டியனையும், சேர மன்னன் பாஸ்கர ரவிவர்மனையும் தோற்கடித்தான். இவர்களுக்கு உதவிய இலங்கை மீதும் படைநடத்தி அதன் தலை நகரைக் கைப்பற்றினான். இலங்கைத்தீவின் வடபகுதி சோழ நாட்டுடன் இணைக்கப்பட்டது. சோழ நாட்டுக்கு வடக்கிலும், கங்கர்களைத் தோற்கடித்து மைசூரை அண்டிய பகுதிகளைக் கைப்பற்றினான். சாளுக்கிய நாட்டின்மீதும் படையெடுத்து அதனைக் கைப்பற்றினான். வடக்கே வங்காளம் வரை இவனது படைகள் சென்று நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.
சிறந்த கடற்படையைப் பெற்றிருந்த இராஜராஜன், தெற்கில் ஈழத்தின்மீது மட்டுமன்றி, இந்தியாவின் மேற்குக் கரைக்கு அப்பால், அரபிக்கடலிலுள்ள இலட்சத்தீவு மீதும், கிழக்குப் பகுதியில் தென்கிழக்கு ஆசியப் பகுதியிலுள்ள கடாரத்தின் மீதும் படையெடுத்ததாக இவன் காலத்திய செப்பேடு ஒன்று தெரிவிக்கிறது.
இன்றைய திரிகோணமலையை அடுத்த கல்வெட்டுகளில் இந்த தமிழ்-பௌத்த மரபு பற்றிய வாசகங்கள் காணப்படுகின்றன. இவை இந்துக் கடவுளர்க்குப் பதிலாக, புத்த பகவானைக் கொண்டு துவங்குகின்றன. புத்த பகவானைத் “தேவன்” என்று குறிப்பிடும் வாசகங்களையும் அங்கே காணமுடியும். ஆக, இந்தத் தமிழ்-பௌத்த மரபினர், இந்து அடிப்படைகளைக் கொண்டிருந்தனர். இவர்கள் புத்தபகவானை ஏற்றுக்கொண்டாலும் அரசியல் ரீதியாக சோழ அரசர்களையே அண்டியிருந்தனர். எடுத்துக்காட்டாக, இவர்களுடைய பௌத்த-விகாரையின் பெயர் ராஜராஜ பெரும்பள்ளி. ராஜராஜசோழ மன்னனின் பெயரில் இது இருப்பது குறிப்பிடத்தக்கது. இதே பெயரில் தமிழ்நாட்டிலுள்ள நாகப்பட்டினத்தில் ஒரு விகாரை அக்காலத்தில் இருந்துவந்ததும் குறிப்பிடத்தக்கது





